மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில் நிலையம் தோற்றுவிக்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்த நிலையில், மெயின் லைன் எனப்படும் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் முக்கிய வழித்தடத்தில் மிகப்பெரிய ரயில் நிலையமாக மயிலாடுதுறை இயங்கி வருகிறது. மயிலாடுதுறை ரயில் நிலையம் தொடர்பாக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளான மயிலாடுதுறை காரைக்குடி இடையே தொடர்வண்டி சேவைகளை மீண்டும் தொடர வேண்டும், மயிலாடுதுறை திருவாரூர் லைனை அனைத்து பிளாட்பாரங்களுடன் இணைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், காரைக்கால் பேரளம் ரயில் பாதை இடையே பயணிகள் ரயில் போக்குவரத்தை தூ துவக்க வேண்டும், டிக்கெட் கவுண்டரில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பண பரிவர்த்தனை மூலம் பெறும் வசதியை மீண்டும் ஏற்படுத்தி தரவேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அடையாளம் உண்ணாவிரதம் நடைபெற்றது. அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு இயற்கை விவசாயி ராமலிங்கம் தலைமை தாங்கினார். பல்வேறு விவசாய சங்கங்களின் பொறுப்பாளர்கள், ரயில் பயணிகள் சங்கத்தினர் உண்ணாவிரப் போராட்டத்தில் பங்கேற்றனர். ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
















