மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி டெல்டா மாவட்ட விவசாயிகள் விவசாயம் செய்ய ஏதுவாக தமிழக அரசு தண்ணீர் திறக்கப்பட்டது இந்த தண்ணீரை பயன்படுத்தி டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி தொடங்கினார்கள் கடந்த இரண்டு தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து விவசாயிகள் மிகுந்த பொருளாதார இழப்புக்கு உள்ளாகி வருகின்றனர் இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தற்போது குறுவை அறுவடை பணிகள் தீவிரமடைந்து வருகிறது நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட பல்வேறு இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் செயல்பட்டு வருகிறது விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லாததால் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் மன்னார்குடி , நீடாமங்கலம் , கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல்லாயிரம் கணக்கான மூட்டைகள் தேங்கியுள்ளது இதனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மணிகளை சாலையில் கொட்டி வைத்து விவசாயிகள் தார்பாய் போட்டு மூடி வைத்து காத்து கிடக்கின்றனர் அவ்வப்போது பெய்து வரும் கனமழை காரணமாக சாலையில் விவசாயிகள் கொட்டி வைத்துள்ள நெல் மூட்டைகள் ஈரப்பதம் ஏற்பட்டு வருவதால் விவசாயி கூலி தொழிலாளர்களை வைத்து நெல் மூட்டைகளை காயவைத்து வருகின்றனர் தற்போது 40 சதவீதம் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன 60 சதவீதம் அறுவடை பணிகள் நடைபெறாமல் இருந்து வருகிறது விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை நாள் ஒன்றுக்கு 1500 மூட்டை வரை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்


















