மயிலாடுதுறை மாவட்டத்தில் உரங்கள் பூச்சி மருந்து இவற்றை தட்டுப்பாடு இன்றி வைக்க விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீரை பயன்படுத்தி மின் மோட்டார்கள் மூலம், முன் பட்ட குறுவை சாகுபடி பணிகள் துவக்கம், 97 ஆயிரம் ஏக்கரில்சாகுபடி செய்ய இலக்கு நிர்வகிக்கப்பட்டுள்ள நிலையில், உரங்கள் பூச்சி மருந்து இவற்றை தட்டுப்பாடு இன்றி இருப்பு வைக்க விவசாயிகள் கோரிக்கை :-

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 97 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின் மோட்டாரை பயன்படுத்தி நிலத்தடி நீர் மூலம் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். வயலில் உழவு செய்தல் நிலத்தை சமப்படுத்துதல், அண்டை வெட்டுதல் போன்ற பூர்வாங்க பணிகள் துவங்கியுள்ளனர். நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்றங்கால் அமைத்து நாற்றுகள் வளர்த்து அவற்றை மீண்டும் வயல்களில் நடவு செய்தல் ஆகிய இரண்டு முறைகளில் குறுவை சாகுபடி செய்வது வழக்கம். தற்பொழுது குறுவை நெல் ரகங்களில் ஏ டி டீ – 36, ஏ டி டீ – 43, ஏ டி டீ (ஆர்) – 45,
ஐ ஆர் – 50,
கோ – 47,
ஏ டி டீ (ஆர்) – 47, மற்றும் கோ ஆர் எச் – 3. ஆகிய ரகங்கள் பெரும்பான்மையாக விதைக்கப்படுகின்றன. தற்பொழுது துவங்கி உள்ள பணிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் நிறைவடையும் என வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள், பூச்சி மருந்துகள், இடுபொருட்கள் ஆகியவற்றை தேவையான அளவு வேளாண் கூட்டுறவு மையங்களில் இருப்பு வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version