மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் வழங்கப்படும் பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள், தங்களின் நில விவரங்களை பதிவு செய்து மத்திய மற்றும் மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், நில உடைமை விவரங்களை பதிவு செய்யாவிட்டால் அடுத்த தவணை நிதி கிடைக்கப்பெறாது என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை பதிவு செய்யாத மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள், அருகிலுள்ள பொது சேவை மையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களில் உடனடியாக பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
