நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி : பேரணியை தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு: தேர்தல் வாக்குறுதியாக அளித்த விவசாய கடன் தள்ளுபடி செய்யவும், காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்தை மத்திய மாநில அரசு மாநில அரசுகள் தடுத்திடவும் வலியுறுத்தல்:
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்த விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பை உடனடியாக செய்ய வேண்டும், காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்தை மத்திய மாநில அரசு மாநில அரசுகள் தடுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கூட்டு இயக்கம் சார்பில் நாகப்பட்டினம் அவுரிதிடலில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று மனு கொடுக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து மறுத்த நிலையில் அனுமதி மீறி விவசாயிகள் நாகப்பட்டினம் அவுரி திடலில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இதில் நாகப்பட்டினம் திருவாரூர் காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது முழுமையான விவசாய கடன் தள்ளுபடியை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும், காவிரி குறுக்கே அணை கட்டுவதை மத்திய மாநில அரசுகள் தடுக்க வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினர். அப்போது அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினார். இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் தடையை மீறி போலீசாரை தள்ளிவிட்டு விவசாயிகள் பேரணியாக சென்றனர். அவர்களை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயற்சி செய்தனர். இதனால் போலீசார் விவசாயிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் கோட்டாட்சியரிடம் மனுவை அளிக்குமாறு அறிவுறுத்தியதால் விவசாயிகள் கோட்டாட்சியரிடம் மனுவை அளித்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் நாகை சிதம்பரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
