• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சாக்கோட்டை கத்தரி சாகுபடியில் ‘தண்டு மற்றும் காய் புழு’ தாக்குதல் கவலையில் விவசாயிகள்  

by sowmiarajan
January 2, 2026
in News
0
சாக்கோட்டை கத்தரி சாகுபடியில் ‘தண்டு மற்றும் காய் புழு’ தாக்குதல் கவலையில் விவசாயிகள்  
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை வட்டாரத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலை மாற்றம் காரணமாக, இப்பகுதியின் புகழ்பெற்ற பச்சை கத்தரி சாகுபடி கடுமையான நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் ஏக்கருக்கு பல்லாயிரக்கணக்கில் செலவு செய்துள்ள விவசாயிகள், விளைச்சல் கைக்கு வரும் நேரத்தில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

சாக்கோட்டை வட்டாரத்தில் சுமார் 4,500 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டாலும், பெத்தாச்சி குடியிருப்பு, பெரியகோட்டை, மித்திரங்குடி, சிறுகப்பட்டி, வீரசேகரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பச்சை கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்கு காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி சந்தைகளில் தனி மவுசு உண்டு. குறிப்பாக, இப்பகுதி கத்தரிக்காய் அதன் சுவை மற்றும் தரத்திற்காகப் இல்லத்தரசிகளிடையே அதிக வரவேற்பைப் பெற்றது.

தற்போது இப்பகுதியில் நிலவி வரும் தொடர் மழை மற்றும் அதிகப்படியான பனிப்பொழிவு காரணமாக, கத்தரி செடிகளில் ‘தண்டு மற்றும் காய் புழு’ (Shoot and Fruit Borer) தாக்குதல் அதிகரித்துள்ளது. விளாரிக்காடு அருகே குளத்துவேலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கத்தரி செடிகளில் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் கருகி விழுகின்றன. பறிக்கப்படும் காய்களில் பாதிக்கும் மேற்பட்டவை புழுக்கள் துளையிட்டு அழுகிய நிலையில் காணப்படுகின்றன.

இது குறித்து கவலையுடன் பேசியுள்ள விவசாயிகள், “ஏக்கருக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து கத்தரி பயிரிட்டுள்ளோம். தற்போது அறுவடை தொடங்கிவிட்ட நிலையில், பறிக்கும் காய்களில் பாதிக்கு மேல் பூச்சி அரித்து வீணாகிப் போகிறது. தரமான மருந்துகளை வாங்கித் தெளித்தும் எந்தப் பயனும் இல்லை. விற்க முடியாத காய்களைக் கால்நடைகளுக்குத் தீவனமாகப் போடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். வேளாண்மைத் துறை அதிகாரிகள் உடனடியாகப் பாதிக்கப்பட்ட விளைநிலங்களைப் பார்வையிட்டு, தகுந்த நோய் தடுப்பு ஆலோசனைகளையும், நஷ்டஈடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

தோட்டப் பயிர்களை நம்பி வாழ்வாதாரம் நடத்தும் நூற்றுக்கணக்கான விவசாயக் குடும்பங்கள், இந்த எதிர்பாராத நோய் தாக்குதலால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. வரும் நாட்களில் வானிலை சீரானால் மட்டுமே மீதமுள்ள பயிர்களையாவது காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Tags: brinjalchakkottaicropsdamage stemfruit
Previous Post

“தேர்தல் ஜுரம் வந்துவிட்டதால் மடிக்கணினி அறிவிப்பு”: திமுக அரசை விமர்சித்து ஆர்.பி. உதயகுமார் அதிரடிப் பேட்டி!

Next Post

ரூ.72 லட்சத்தில் சாத்தப்பர் ஊரணி புனரமைப்பு பணிகள் முடிவதற்குள் ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

Related Posts

கன்னியாகுமரி புனித சவேரியார் பேராலய திருவிழா – திருக்கொடியேற்றம்
News

கன்னியாகுமரி புனித சவேரியார் பேராலய திருவிழா – திருக்கொடியேற்றம்

November 24, 2026
மன்னார்குடி அருகே கிராம மக்களுக்கு இலவச பிசியோதெரப்பி முகாம்
News

மன்னார்குடி அருகே கிராம மக்களுக்கு இலவச பிசியோதெரப்பி முகாம்

November 24, 2026
வலங்கைமான் அருகே உப்புத்தன்மை கலந்த குடிநீரால் நோய் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்
News

வலங்கைமான் அருகே உப்புத்தன்மை கலந்த குடிநீரால் நோய் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்

November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கார்த்திகைதீபம் ஏற்றப்பட்டது

November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

தரங்கம்பாடி & சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை

November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

தில்லையாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் MLA பங்கேற்பு பொதுமக்கள் மனு அளித்தனர்

November 24, 2026
Next Post
ரூ.72 லட்சத்தில் சாத்தப்பர் ஊரணி புனரமைப்பு பணிகள் முடிவதற்குள் ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

ரூ.72 லட்சத்தில் சாத்தப்பர் ஊரணி புனரமைப்பு பணிகள் முடிவதற்குள் ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கன்னியாகுமரி புனித சவேரியார் பேராலய திருவிழா – திருக்கொடியேற்றம்
News

கன்னியாகுமரி புனித சவேரியார் பேராலய திருவிழா – திருக்கொடியேற்றம்

by Satheesa
November 24, 2026
மன்னார்குடி அருகே கிராம மக்களுக்கு இலவச பிசியோதெரப்பி முகாம்
News

மன்னார்குடி அருகே கிராம மக்களுக்கு இலவச பிசியோதெரப்பி முகாம்

by Satheesa
November 24, 2026
வலங்கைமான் அருகே உப்புத்தன்மை கலந்த குடிநீரால் நோய் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்
News

வலங்கைமான் அருகே உப்புத்தன்மை கலந்த குடிநீரால் நோய் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்

by Satheesa
November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கார்த்திகைதீபம் ஏற்றப்பட்டது

by Satheesa
November 24, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6