விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால், ராணா டகுபதி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு

ஹைதராபாத் :
தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான பரபரப்பு விவகாரம் தென்னிந்திய திரையுலகத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலியை விளம்பரப்படுத்தியதற்காக நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை நிதி அகர்வால், ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி, ப்ரணிதா சுபாஷ் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை (ED) வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த பட்டியலில் பிரபல நடிகர்கள் மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களில் வலுவான தாக்கம் செலுத்தும் Media Influencer-களும் இடம்பெற்றுள்ளனர். தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்த சூழலில், தடை செய்யப்பட்ட சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதற்காக இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது.

தொழிலதிபர் பஹனிந்த்ரா ஷர்மா என்பவருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்தான் இந்த செயலியின் முதன்மை இயக்குநராக இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான விளம்பரங்களின் மூலம் பொதுமக்களை வழிதவறச் செய்ததாகவும், அதன் விளைவாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த விவகாரம் தெலங்கானா மாநிலத்தின் சைபராபாத் போலீசாரிடம் முன்வைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையின் கவனத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதன்பின், 6 பிரபல நடிகர்கள் மற்றும் 19 சமூக வலைதள பிரபலர்கள் உள்ளிட்ட மொத்தம் 29 பேருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் திரையுலகம் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version