மயிலாடுதுறை அருகே மேமாத்தூரில் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் மேமாத்தூர் கிராமத்தில் மின்கம்பங்கள் மாற்றும் பணியில் 10-க்கு மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை மதியம் ஈடுபட்டிருந்தனர். புதிய மின்கம்பத்தில் கம்பிகள் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மேலே சென்ற உயர்மின்னழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியத்தில் முடிதிருச்சம்பள்ளியை சேர்ந்த ஒப்பந்த ஊழியர் தினகரன்(35), கேங்மேன் அற்புதராஜ்(28) ஆகியோர்மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். உடன் அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே தினகரன் உயிரிழந்தார். காயமடைந்த அற்புதராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

















