சென்னையில் அரை மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் மழை பெய்தால் எதிர்கொள்வதற்காக மின்மோட்டார் டிராக்டர்கள் : அமைச்சர் கே என் நேரு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மேலும் 250 மில்லியன் லிட்டர் சுத்திகிரிப்பு மையத்தை முதலமைச்சர் செப் 20. திறந்து வைக்கிறார் : கே என் நேரு
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதலாக 240 மில்லியன் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வழங்கப்படும் திட்டத்தை செப்டம்பர் 20ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைப்பார் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார்.
சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரி சுத்தகரிப்பு மையத்தில் 240 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்திகரிப்பு செய்யும் கூடுதல் மையத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளன. பணிகள் நிறைவடைந்த சுத்திகரிப்பு மையத்தை அமைச்சர் கே.என் நேரு நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். அவருடன் திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் மற்றும் பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உடனே இருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே என் நேரு, “சராசரியாக செய்யக்கூடிய வடகிழக்கு பருவமழை செய்தால் இயற்கையாகவே தண்ணீர் வடிந்து விடும் அளவிற்கு மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் ஒரே நேரத்தில் குறுகிய இடத்தில் அதிகப்படியான மழை பெய்தால் தண்ணீர் தேங்கி விடக்கூடாது என்பதற்காக டிராக்டர்கள், மின்மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
நேற்று கூட அரை மணி நேரத்தில் 11 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அதனை எதிர்கொள்ள அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கால்வாய்களும் தூர்வாரப்பட்டுள்ளன. 20 சென்டிமீட்டர் மழை என்பது நான்கு அல்லது ஐந்து மணி நேரம் இடைவெளியில் பெய்தால் பிரச்சனை இல்லை. ஆனால் அரை மணி நேரத்தில் பெய்தால்தான் தண்ணீர் தேங்கும்.
அதற்காகத்தான் மோட்டார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஏற்கனவே 260 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து சென்னைக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் 240 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார்.
தற்போது புதிதாக தொடங்கப்படும் 240 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு நீரானது ஆவடி, பூந்தமல்லி, மாங்காடு திருமழிசை உள்ளிட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.
