சிங்கப்பூர் :
புறாக்களுக்கு சட்டத்திற்கு விரோதமாக உணவளித்ததாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 70 வயதுடைய பெண்ணுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் ரூ.80,000 (1,200 சிங்கப்பூர் டாலர்) அபராதம் விதித்துள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர் விபரம் :
சண்முகானந்தம் ஷியாமலா என்ற 70 வயது மூதாட்டி, சிங்கப்பூரின் தோ பாயோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். புறாக்களுக்கு உணவளிப்பது அவரது வழக்கமான பழக்கமாக இருந்தது.
சட்ட விதிகள் :
சிங்கப்பூரில் பொதுவெளிகளில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவு அளிக்க வேண்டுமெனில், வனவிலங்குகள் மேலாண்மை அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதி பெற வேண்டும். இதை மீறுவதற்கான தண்டனை முற்றிலும் சட்டபூர்வமானது.
முந்தைய எச்சரிக்கையும் மீறல் :
2020 ஆம் ஆண்டு, இதே குற்றச்சாட்டில் ஷியாமலாவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை வழங்கியது. இருப்பினும், 2024ஆம் ஆண்டும் தொடர்ச்சியாக புறாக்களுக்கு உணவளித்து வந்ததாக கூறப்படுகிறது.
பிப்ரவரி சம்பவம் :
2025 பிப்ரவரி 19ஆம் தேதி, புறாக்களை பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்ட அதிகாரிகளின் பயிற்சியை ஷியாமலா தடுத்ததாக கூறப்படுகிறது. அதோடு, அதிகாரிகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கையில் உலோகக் கம்பியை வைத்திருந்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்ப :
மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில், சிங்கப்பூர் நீதிமன்றம் ஷியாமலாவுக்கு ரூ.80,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அவருடைய வயதைக் கருத்தில் கொண்டு குறைந்த அளவிலேயே அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அபராதம் செலுத்தத் தவறினால் இரண்டு நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சமூக வலைதளங்களில் எதிரொலி :
இச்சம்பவம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “புறாக்களுக்கு உணவு கொடுத்தது குத்தமா?” என்ற கேள்வியுடன் நெட்டிசன்கள் இந்த தீர்ப்பை விமர்சித்து வருகின்றனர்.