December 2, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உட்கட்சி பூசல் காரணமாக பொறுப்பிலிருந்து விலகிய துரை வைகோ!

by Digital Team
April 19, 2025
in News
A A
0
உட்கட்சி பூசல் காரணமாக பொறுப்பிலிருந்து விலகிய துரை வைகோ!
0
SHARES
19
VIEWS
Share on FacebookTwitter

மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியின் முதன்மை செயலாளர் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பலர் அதிருப்தியால் கட்சியில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், துரை வைகோ பொறுப்பேற்ற நாள் முதல் அவரது ஆதரவாளர்கள் மல்லை சத்யாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், கட்சி நிகழ்ச்சிகளில் அவரது பெயரை பேனர், போஸ்டர்களில் பயன்படுத்தக் கூடாது என கட்டுப்பாடுகள் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைக்கோவிற்கும், துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தியாவிற்கும் இடையே கருத்துமோதல் வெடித்துவந்தது. இந்நிலையில் மதிமுகவின் நிர்வாகக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள சூழலில், மதிமுக கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக துரைவைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள துரை வைகோ, “ மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ அவர்கள் திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான் உடனடியாக நாடு திரும்பினேன்.

தலைவருக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டு பேஸ் மேக்கர்,ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இதனால் எப்போதும் சுற்றுப் பயணங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த எனது தந்தை வைகோ அவர்கள் வழக்கம் போல செயல்பட முடியாத நிலை உருவானது. தலைவர் என்பதை தாண்டி என் தந்தை உடல் நலத்தை பாதுகாக்க அவரை கண்ணை இமை காப்பது போல் பாதுகாக்க முடிவு எடுத்து அவருக்கு கடமையாற்றி வந்தேன். சென்னையில் நடந்த மாநாட்டிலும் தலைவருடன் இருந்து கவனித்துக் கொண்டேன்.

என் தந்தை தலைவர் வைகோ அவர்களுக்காக இத்தனை ஆண்டு காலம் எத்தனையோ சோதனைகளை தாங்கிக் கொண்டு தங்கள் கைப் பணத்தை செலவிட்டு கட்சிக்காக உழைத்து வரும் மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கட்சியை காப்பாற்றி வருகிறார்களே, அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்பது என்னுடைய கடமை என்பதை உணர்ந்தேன். அப்படி செல்லுகிற தருணங்களில் அவர்களின் நிபந்தனையற்ற அன்பு என்னை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

தமிழ்நாட்டில் திமுகவை தவிர பிற கட்சிகள் ஒன்றியத் தலைவர் பதவியை ஒரு இடத்திலே கூட பிடிக்க முடியாத நிலைமையில் மதிமுக குருவிகுளம் பஞ்சாயத்து யூனியனைக் கைப்பற்றியது. மதிமுக ஒன்றியக் குழுத் தலைவர் பதவி ஏற்றதும் இயக்கத் தந்தை வைகோ அவர்களை அந்த அலுவலகத்தில் சேர்மன் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த போது நானும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்களும் அடைந்த நெகிழ்ச்சிக்கு அளவு இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கழகத் தொண்டர்கள் நிர்வாகிகள் என்னை கட்சியில் ஈடுபடுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்து அழைத்த வண்ணம் இருந்தனர். கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முன்வந்த தலைவர் நிர்வாக குழு கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டார். நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொண்ட 106 பேரில் 104 பேர் கழகத்தில் நான் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வாக்குகளை அளித்தனர். இப்படியாகத்தான் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளராக, அதன் பின்னர் பொதுக்குழுவில் முதன்மைச் செயலாளராக கட்சியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் ஒருபோதும் எந்த பொறுப்பையும் தலைமை பதவியையும் விரும்பியதில்லை.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற இந்த மாபெரும் இயக்கத்தில் நான் ஒரு முன்னணி தொண்டனாக இருந்து இயக்கத்திற்கும், தொண்டர்களுக்கும், இயக்கத் தந்தை வைகோ அவர்களுக்கும் பணியாற்ற வேண்டும், அது என் கடமை என்று மனதில் உறுதி ஏற்றுக் கொண்டேன். சட்டமன்றத் தேர்தல் வந்த போது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு இடங்களில் சாத்தூர் தொகுதியும் ஒன்றாகும். அத்தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று இயக்கத் தோழர்களும் சாத்தூர் தொகுதி மக்களும் , அதைவிட மேலாக கூட்டணி தலைமையும் விரும்பிய நிலையில் நான் போட்டியிடாமல் அந்த வாய்ப்பு கட்சியில் மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் டாக்டர் ரகுராமனுக்கு கிடைக்கச் செய்தேன்…” என்று பதிவிட்டுள்ளார்.

Tags: durai vaikomdmkpolitical newsvaiko
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அரசின் திட்டங்கள் துவக்கம்! ரூ.1.166 கோடி : 63,124 பேருக்கு பட்டா வழங்கியதில் முதல்வர் பெருமிதம்

Next Post

இனி நீங்கள் ரசிகர்கள் இல்லை “𝗩𝗜𝗥𝗧𝗨𝗔𝗟 𝗪𝗔𝗥𝗥𝗜𝗢𝗥𝗦”!

Related Posts

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
News

December 2, 2025
இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்
News

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

இனி நீங்கள் ரசிகர்கள் இல்லை "𝗩𝗜𝗥𝗧𝗨𝗔𝗟 𝗪𝗔𝗥𝗥𝗜𝗢𝗥𝗦"!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

December 2, 2025
சென்னை தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது – போக்குவரத்து நெரிசல்

SIR-ஐ எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் அடுத்தது ஒத்திவைப்பு

SIR-ஐ எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் அடுத்தது ஒத்திவைப்பு

December 2, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

0
இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

0
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

0
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

0
எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

December 2, 2025
இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

December 2, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

December 2, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.