மயிலாடுதுறை ரயில்வே பிளாட்பாரத்தில், கீற்று கொட்டகை போடும் போராட்டத்தில், DREU தொழிற்சங்க நிர்வாகிகள் ஈடுபட்டனர், ஏராளமான காவல்துறை குவிப்பு : –
ரயில்வே தொழிற்சங்கங்களுக்கான அங்கீகார தேர்தல் கடந்த 15 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது, இந்த தேர்தலில் பங்குபெற்ற ரயில்வே தொழிற்சங்கமான DREU க்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அலுவலகம் இன்னும் ஒதுக்கப்படவில்லை. அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து DREU தொழிற்சங்கம் சார்பில், ரயில்வே பிளாட்பாரத்தில் கீற்று கொட்டகை போடும் போராட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கீற்றுகள், கட்டுவதற்கான கழிகள், கயர்களுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் ரயில் நிலையம் உள்ளே செல்ல முற்பட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதம் நிலவியது தொடர்ந்து ரயில்வே நிலைய முதல் பிளாட்பார்த்திற்கு சென்ற DREU தொழிற்சங்க நிர்வாகிகள் அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.போராட்டத்தை முன்னிட்டு ரயில்வே நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது













