அரசின் பல்வேறு சேவைகள் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றுதல், வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டிட மனை பிரிவு வரைபடத் திட்டம், வேலையில்லா இளைஞருக்கு வேலைவாய்ப்பு திட்டம், ஆதார் அட்டை வழங்குதல் ,பெயர் சேர்த்தல் நீக்குதல், மருத்துவ முகாம், உள்ளிட்ட 15 துறை சார்ந்த 46 திட்டங்களுக்கு மக்களை தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை பொதுமக்கள் நேரடியாக பயன்பெறும் வகையில் விழுப்புரம் நகரப் பகுதியில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் அப்பொழுது மாற்றுத்திறனாளி ஒருவர் தனக்கு மூன்று சக்கர வாகனம் சைக்கிள் வேண்டுமென கோரிக்கை வைத்திருந்த நிலையில் மூன்று சக்கர வாகனத்தை உடனே வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் இந்நிகழ்வில் நகர செயலாளர் சக்கரை நகர மன்ற தலைவர் தமிழ் செல்வி பிரபு நகராட்சி ஆணையர் உள்ளிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வார்டுஉறுப்பினர்கள் , கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்
