நடிகர் அஜித் தமிழ்நாட்டில் முதல்நாள் முதல் காட்சியில் ரசிகர்கள் செய்யும் செயல்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்தை ஒரு தனி நபரை மட்டுமே பொறுப்பாக்க முடியாது, இந்தியாவில் நான் கார் ஓட்டுவதே சிரமமான விஷயம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் குட் பேட் அக்லி படத்திற்கு பின் அஜித் குமார் கார் ரேஸிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.அஜித் குமார் ரேஸிங் டீம் இந்தியா முழுவதும் பிரபலமாகி வரும் சூழலில், மீண்டும் உடல் எடையை குறைத்து அசத்தி இருக்கிறார். அதேபோல் மோட்டார் ஸ்போர்ட்ஸை இந்தியாவில் பிரபலப்படுத்தும் வகையிலும் அஜித் குமார் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் ரேஸிங் டீம் உருவாக்கப்பட்ட பின், அஜித் குமாரின் ஒவ்வொரு நடவடிக்கையும், அதன் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் பதிவிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் மற்றும் தமிழ் சினிமாவின் முதல்நாள் முதல் காட்சி, ரசிகர்களின் சண்டை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார். அதில் அஜித் குமார் பேசுகையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை வைத்து தமிழ்நாட்டில் ஏராளமான விஷயங்கள் நடந்து வருகிறது. அந்த சம்பவத்திற்கு விஜய் மட்டுமே காரணம் என்று சொல்ல முடிடாது. நாம் அனைவருமே காரணம். கூட்டத்தை காட்ட வேண்டும் என்று வெறியாக இருக்கிறோம். இது சினிமாத் துறையையே மோசமானதாக காட்டுகிறது. அதேபோல் மீடியாக்கள் ஒரு படத்தின் முதல் நாள் முதல் ஷோவில் ரசிகர்கள் இப்படி செய்தாரள், அப்படி செய்தார்கள் என்ற் காட்டுகின்றனர். நடிகர்கள் மீது அன்பு வைத்தாலே போதுமானது.
திரையரங்களுக்குள் பட்டாசு கொளுத்துகிறார்கள்.. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது. அதேபோல் ஒரு நடிகருக்கு எதிரான இன்னொரு நடிகரை முன் வைப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு ரசிகரும் தங்களுக்கு பிடித்த நடிகரே நம்பர் 1 என்று நினைப்பார்கள். அப்போது ஒருவருக்கு எதிராக மற்றொருவரை வைத்தால், அது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதை போல் தான். அதனை எப்போதும் செய்யக் கூடாது. அதேபோல் என்னால் இந்தியாவில் கார் ஓட்ட முடியாது. நான் எடுத்தால், அடுத்த சில நிமிடங்களில் என்னை அடையாளம் கண்டு என்னுடன் புகைப்படம் எடுக்க விரும்புவார்கள். சில நேரங்களில் என் காரினை பின் தொடர தொடங்கிவிடுவார்கள். சில நேரங்களில் எனது கார் மோதி விபத்து கூட ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
