September 9, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேட வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

by Divya
August 22, 2025
in News
A A
0
ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேட வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

“உங்களின் ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேட வேண்டாம். பொழுதுபோக்கு வாழ்க்கையின் ஒரு அங்கமே தவிர, அது வாழ்க்கை அல்ல. ரீல்ஸ்களில் வரும் அனைத்தையும் உண்மை என நம்ப வேண்டாம்,” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட அவர் உரையாற்றியபோது கூறியதாவது:
“ஒரு காலத்தில் கல்வி நமக்கு மறுக்கப்பட்ட ஒன்று. பல போராட்டங்களுக்குப் பிறகே கல்வி கதவு திறக்கப்பட்டது. இன்னும் கல்விக்காக போராடும் மக்கள் உள்ளனர். கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே நான் ‘முதல்வர்’, ‘புதுமைப்பெண்’, ‘காலை உணவுத் திட்டம்’ உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். எல்லாருக்கும் எல்லாம் எனும் நோக்கத்தோடு நாங்கள் செயல்படுகிறோம்.

ஆனால், இந்திய அளவில் பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. அதற்கு அரசு துணைபோகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு சிறுபான்மையினர் நெருக்கடியில் உள்ளனர். இது நிரந்தரம் அல்ல. மத நல்லிணக்கத்தை கெடுக்கும் சக்திகளின் கூட்டம் நீடிக்காது. சாதி, மதப் பிரிவினை பாராமல் அனைவரையும் சமமாக மதிக்கும் பண்பை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். தமிழகம் சமத்துவ பூங்காவாக, சகோதரத்துவத்தோடு திகழ்வதற்கு மாணவர்கள் அதே எண்ணத்தோடு வளர வேண்டும்,” என்றார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது:
“அறிவியல் வளர்ந்துள்ளது. அறிவை பெற பல வாய்ப்புகள் உள்ளன. செயற்கை நுண்ணறிவு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ‘செயற்கை நுண்ணறிவு இருக்கிறதே, நாம் ஏன் படிக்க வேண்டும்?’ என்று எண்ண வேண்டாம். எந்தக் கண்டுபிடிப்பையும் உங்கள் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். அது உங்கள் சிந்தனையை சிதைக்கக் கூடாது.

‘Likes’ அல்லது ‘Views’ கெத்து அல்ல. ‘Marks’, ‘Degrees’ தான் கெத்து. படிப்பதோடு விளையாட்டிலும் சிறந்து விளங்குங்கள். உடல்நலனை கவனிக்கவும். எப்படி ‘Upgrade’ ஆக வேண்டும் என்பதை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பதை பெற்றோர் கவனமாகக் கேட்க வேண்டும். மனதார பேச வேண்டும். எந்த பிரச்சினையும் குழந்தைகள் பயப்படாமல் பகிரும் வகையில் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். சிறந்த நண்பர்கள் யார் எனக் கேட்டால், குழந்தைகள் ‘அப்பா, அம்மா’ எனச் சொல்லும் நிலைக்கு வர வேண்டும். கல்வி, நண்பர்கள், சூழல் ஆகியவையே குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.”

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Tags: Instagrammk stalinstalin advicestalin speechstudents
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கொடுத்த வாக்குறுதியை மறப்பதே ஸ்டாலினுக்கு பழக்கம்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

வத்தலக்குண்டு: சப்தகன்னிமார் கோயிலில் கிராம தேவதை ஆலய பிரதிஷ்டை விழா

Related Posts

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ
News

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு
News

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026
Next Post
வத்தலக்குண்டு: சப்தகன்னிமார் கோயிலில் கிராம தேவதை ஆலய பிரதிஷ்டை விழா

வத்தலக்குண்டு: சப்தகன்னிமார் கோயிலில் கிராம தேவதை ஆலய பிரதிஷ்டை விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
ஞானமலை முருகன் கோவில்

ஞானமலை முருகன் கோவில்

October 24, 2025
40 இடங்களில் இனி டிரெக்கிங் போகலாம் தெரியுமா?

May 31, 2025
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

September 8, 2026
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

0
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.