“மற்றவர்களின் மனதை பிணமாக்கி கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா ?” – பார்த்திபன் காட்டம்

நடிகர் பார்த்திபன் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவில், “மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு யூடியூப் வீடியோ லிங்கை பகிர்ந்துள்ளார். அந்த லிங்கில், “சற்று முன் பரபரப்பு.. பார்த்திபன் இறைவனடி சேர்ந்தார்” என தலைப்பு இருந்தது. இதற்கான தனது கருத்தில் பார்த்திபன், இது போன்ற பொய்யான செய்திகள் மரணமடைய வேண்டும் எனக் கூறியுள்ளார். அவர் மேலும், இதுபோன்ற செய்திகள் தயாரிப்பவர்கள் தங்களின் வாய்க்கரிசிக்காக செய்கிறார்கள், ஆனால் இது தொடர்புடையோரின் குடும்பங்களின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் கூறியதாவது, “இது பலமுறை என்னை மட்டுமல்ல, பலரையும் இறைவனடி சேர shortest route ticket வாங்கி கொடுக்கிறது. இவர்களை திருத்த சாமியும், அறிவும் உதவ வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்த வீடியோவில் பரவிய பொய்யான தகவல்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version