காங்கிரஸ் கட்சியினர் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல். பரபரப்பு காட்சிகள்

காங்கிரஸ் கட்சியினர் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல். பரபரப்பு காட்சிகள்.

மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் மீது, திமுகவினர் தாக்குதல் நடத்தும் நேரடி காட்சிகள், காங்கிரஸ் நிர்வாகிகளை தாக்கிய பின்பு காங்கிரஸ் கொடிகளை நடுரோட்டில் போட்டு செருப்பால் மிதித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர் :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில், காங்கிரஸ் கட்சி சார்பில், கவர்னரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர், பானுசேகர் தலைமையில் நடைபெற்றது. பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த நிலையில், அப்பகுதியில் காங்கிரஸ் குழுவாக நின்று பேசிக் கொண்டிருந்தனர், அப்போது அங்கே வந்த, திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மருது மற்றும் திமுகவினர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மீது திடீரென்று தாக்குதல் நடத்தினர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் சிதறி ஓடினர், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பானுசேகர் மற்றும் பொறுப்பாளர் ராஜா மற்றும் , மணல்மேடு அன்பழகன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியதில் ராஜா கீழே விழுந்து காயம் அடைந்தார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சி கொடிகளை பிடுங்கி நடுரோட்டில் போட்டு காலால் மிதித்து, திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version