நரசிங்கபுரத்தில்திமுகவினர்அதிரடி: வானவேடிக்கைமுழங்கபொதுமக்களுக்குஇனிப்புமழை – முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்பிறந்தநாளைஉற்சாகமாகக்கொண்டாடியநகரதிமுக!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. நரசிங்கபுரம் நகரக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, நகரச் செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். விழாவின் ஒரு பகுதியாக, நரசிங்கபுரம் பேருந்து நிறுத்தப் பகுதியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கூடி, வானவேடிக்கைகள் முழங்க, பட்டாசுகள் வெடித்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற நகர மன்றத் தலைவர் அலெக்சாண்டர், பொதுமக்களுக்கும் பேருந்து பயணிகளுக்கும் இனிப்புகளை வழங்கி முதலமைச்சரின் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையில் அமைந்த இந்த விழாவில், நகரப் பொருளாளர் இளவரசு, நகரத் துணைச் செயலாளர் பிரகாஷ் மற்றும் வார்டு செயலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நரசிங்கபுரம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதோடு, ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு அறப்பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், நரசிங்கபுரத்தில் நடைபெற்ற இந்த உற்சாகமான கொண்டாட்டம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி உறுப்பினர்கள், கழக முன்னோடிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டு “வாழ்க தமிழக முதல்வர்” என முழக்கமிட்டு விழாவினைச் சிறப்பித்தனர். நகரச் செயலாளர் வேல்முருகன் பேசுகையில், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நரசிங்கபுரம் நகராட்சியில் மக்கள் நலப்பணிகள் தொடர்ந்து தொய்வின்றி மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

Exit mobile version