பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கட்சியில் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்க இருவரும் போட்டி கூட்டத்தையும் நடத்துகிறார்கள். அதுமட்டுமின்றி இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டுவது மோதலின் உச்சத்தை காட்டுகிறது.
நிலையில், பாமக பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரத்தில் 9-ம் தேதி நடைபெறும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தால் அதன்படி இன்று அன்புமணி ராமதாஸ் தலைமையில். பொதுக்குழு கூட்டம் மாம்பழபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது இந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினார் அப்போது பேசிய அவர்.
தைலாபுரம் பிரச்சனைக்கு முக்கிய காரணம் திமுக தான்
என்றும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து திமுகவை வீட்டுக்கு அனுப்பவும் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.


















