விழுப்புரத்தில் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மத்திய மாவட்டம் சார்பில் தொண்டர்களுக்கு தடபுடலாக விருந்து

விழுப்புரத்தில் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மத்திய மாவட்டம் சார்பில் தொண்டர்களுக்கு தடபுடலாக விருந்து அளிக்கப்பட்டது.

விழுப்புரம்
மத்திய மாவட்ட திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் வடை, பாயாசம் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளுடன் தடபுடலான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளரும்,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான லட்சுமணன் கலந்துகொண்டு மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அமர்ந்து விருந்து அருந்தினார்.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தொண்டர்கள், ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்ததுடன், தொகுதி வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் லட்சுமணனுக்கு நன்றியும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு கொண்டாட்டத்தை சிறப்பித்தனர்.

Exit mobile version