தீபாவளி முடித்தது.. கரூர் வந்த சிபிஜ அதிகாரிகள்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த சிபிஐ உயர் அதிகாரிகள் மீண்டும் கரூர் வருகை – ஆவணங்களுடன் கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் ஆஜராகி உள்ளார்.

கரூர் தமிழக வெற்றிக்கழக விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கடந்த 17 – ஆம் தேதி தொடங்கி, 2 நாட்கள் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், தீபாவளியை முன்னிட்டு கடந்த 19ஆம் தேதி சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

கடந்த 21ம் தேதி ஆய்வாளர் மனோகரன், தலைமை காவலர் ஒருவர் என இரண்டு பேர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கி மொழி பெயர்ப்பு பணிக்களை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இரண்டு வாகனங்களில் ஆறு பேர் கொண்ட சிபிஐ உயரதிகாரிகள் குழு மீண்டும் கரூர் வந்துள்ளது. இரண்டாம் கட்ட விசாரணையை துவங்கியுள்ள அவர்கள் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர்.

இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் தங்கியுள்ள சுற்றுலா மாளிகைக்கு கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் ஆஜராகி இருக்கிறார். மதியம் 2:30 மணிக்கு கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளே சென்று அவர் தற்போது வெளியே சென்று விட்டார்.

Exit mobile version