விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான ‘ரெட் ரன்’ மாரத்தான் போட்டி
1,100 மாணவ-மாணவிகள் பங்கேற்பு*
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான ‘ரெட் ரன்’ மாரத்தான் போட்டி நடைபெற்றது.
போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்டத்தில் உள்ள 29 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 1,100 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர் நல்லதம்பி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஆழிவாசன், ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு செல்லத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.













