மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். 7 லட்சத்து 29 ஆயிரத்து 216 மொத்த வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.24 ஆயிரத்து 126 நபர்கள் புதிய வாக்காளர்களாக சேர்ப்பு:-
தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வந்த சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அந்த வகையில்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 3,60,493, பெண் வாக்காளர்கள் 3,68,676, மூன்றாம் பாலினத்தவர்கள் 47 என்று
மொத்தம் 7,29, 216, வாக்காளர்கள் உள்ளனர் .
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதற்கு பிறகு 24,126 நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 3032 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
















