மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு, நிலைமையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பேட்டி :-
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள டிட்வா புயல் காரணமாக நேற்று இரவு துவங்கி பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மழையின் வேகம் தற்பொழுது அதிகரித்துள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் H.S.ஸ்ரீகாந்த் ஆய்வு மேற்கொண்டார் மயிலாடுதுறை நகராட்சி சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள், மரம் அறுக்கும் இயந்திரம் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நிலைமையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்பு படை ஆகியவை வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

















