‘கனா’ திரைப்பட வெற்றிக்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு ‘தும்பா’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த தர்ஷன், அப்படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. அதன் பின்னர், தற்போது அவர் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் SK Productions மற்றும் Playsmith Productions இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. அண்மையில் வெளியாகியுள்ள படத்தின் டிரெய்லர், ரசிகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
படத்தின் கதையின் மையக் கரு – ஒரு நபர் வீடு வாங்குகிறார்; அதன்பின் அங்கு நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்களைச் சுற்றி கதை நகர்கிறது. இப்படம் ஒரு காமெடி ஹாரர் வகை திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தணிக்கை குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. திரைப்படத்தின் நேரம் 2 மணி நேரம் 9 நிமிடங்கள் ஆகும்.