போர் தொழில் படத்திற்கு பிறகு, இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார். ‘D54’ என அடையாளம் காணப்படும் இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்க, இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றுகிறார்.
இந்நிலையில், ‘D54’ படத்தின் பூஜை விழா இன்று (ஜூலை 10) காலை நடைபெற்று முடிந்தது. இதில் தனுஷின் நெருக்கமான நண்பரும், அவருக்கு பல வெற்றிப்படங்களை வழங்கிய இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். மேலும், இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் நடிகர் கருணாஸும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இன்று காலை ‘D54’ படத்தின் முதல் போஸ்டர் வெளியான நிலையில், பூஜை விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

















