தேவாவுக்கு ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பெருமைக்குரிய கௌரவம்

சிட்னி : புகழ்பெற்ற இசையமைப்பாளர் தேவா, ஆஸ்திரேலியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க மரியாதையை பெற்றுள்ளார். அவர் சமீபத்தில் மேற்கொண்ட பயணத்தின்போது, ஆஸ்திரேலிய பாராளுமன்றம் சிறப்பு அழைப்பை வழங்கியது.

திரையுலகில் “தேனிசைத்தென்றல்” எனப் போற்றப்படும் தேவா, 36 ஆண்டுகளுக்கும் மேலான இசைப் பயணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மெலடியில் இருந்து மாஸ்ஸான பின்னணி இசை வரை, குறிப்பாக கானா பாடல்களுக்கு தனித்துவம் சேர்த்தவர் என்ற பெயரை ரசிகர்கள் வழங்கியுள்ளார்.

இந்த பங்களிப்புகளை மதித்து, தேவாவை பாராளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கையில் அமர அழைத்ததோடு, அங்குள்ள முக்கியச் சின்னமான செங்கோலும் வழங்கி கௌரவித்தனர். அரசியல் மட்டத்தில் வழங்கப்பட்ட இந்த மரியாதை, தமிழ் இசைத்துறைக்கு பெருமையைச் சேர்த்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த அனுபவம் குறித்து தேவா நெகிழ்ச்சியுடன் தனது நன்றியை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அரசு, தமிழ்க் கலை மற்றும் கலாச்சார மையம், சக இசைக்கலைஞர்கள், மேலும் ரசிகர்களின் ஆதரவு தான் இம்மிகப்பெரிய அங்கீகாரத்திற்கு வழிவகுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

தேவாவுக்குக் கிடைத்த இந்த அரிய கௌரவம், தமிழரின் கலை மற்றும் பண்பாட்டின் சர்வதேச அடையாளமாகும்.

Exit mobile version