திருவாரூரில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்கிற்கு அனுப்ப வேண்டும்.. இந்த ஆட்சி விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை.. டெல்டா மாவட்டத்தை பாதுகாக்க பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அண்ணா திமுக ஆட்சி தான்..” திருவாரூரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேட்டி.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது.. நெல் மூட்டைகள் தேக்கமடையாமல் உடனுக்குடன் கிடங்கிற்கு அனுப்ப வேண்டும் என்றும்..மேலும் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் வாங்கப்படுவதை அடுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட பாஜகவினர் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.. தொடர்ந்து பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் சொல்லும்போது.. திருவாரூர் மாவட்டத்தில் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்கிற்கு அனுப்ப வேண்டும்.. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக தான் என்று கூறினார்..
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் சிவகாமராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ராகவன், மாநில விவசாய அணி துணை தலைவர் கோவி சந்துரு, மாவட்டத் துணைத் தலைவர் கே பி ரவி, மாவட்ட பொருளாளர் அட்சயா முருகேசன், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் கழுகு சங்கர் நகர தலைவர் கணேசன் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

















