தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் முகாம் மனுக்கள் அளிக்க குவிந்த மக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் முகாம் மனுக்கள் அளிக்க குவிந்த மக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி முகாம் நடைபெற்று வருகிறது இந்த முகாமில் கிராம கணக்குகள் சரிபார்ப்பு மற்றும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது தில்லையாடி குறு வட்டம் அளவில் சுமார் 18 வருவாய் கிராமங்களுக்கு கணக்குகள் சரிபார்ப்பு மற்றும் மனக்கள் பெறப்பட்டது ஏராளமான பொதுமக்கள் திரண்டு தங்கள் கோரிக்கை சார்ந்த மனுக்கள் அளித்தனர் முகாம் சீர்காழி வருவாய் கோட்ட அலுவலர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது இதில் திருக்கடையூரில் அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலை நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதாகவும் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது இதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகாமில் வாக்குவாதம் செய்தனர் திருக்கடையூர் கிராமத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என முகாம் அலுவலர் தெரிவித்தார் பலர் தங்கள் கோரிக்கை சார்ந்து மனுக்கள் அளித்தனர்.

Exit mobile version