உலகப் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் புத்தாண்டை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் தருமபுரம் ஆதீனம் சிறப்பு வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் இந்த ஆலயத்தில் நாள்தோறும் ஆயுள் ஹோமம் சஷ்டி பூர்த்தி சதாபிஷேகம் கனகாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்கள் சிறப்பு யாக பூஜைகள் நடைபெறுவது வழக்கம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் நாள்தோறும் வந்து சிறப்பு தரிசனம் செய்து வழிபாடு செய்து செல்கின்றனர் இந்நிலையில் இன்று ஆங்கில புத்தாண்டு ஒட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் மேலும் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கோவிலுக்கு வந்து சிறப்பு தரிசனம் வழிபாடு செய்தார் மேலும் புத்தாண்டை ஒட்டி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் இனிப்புகள் வழங்கினார் கோவில் நிர்வாகிகள் குருக்கள் இருந்தனர் முன்னதாக ஆதீனத்திற்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.














