தெரு நாய் குறுக்கே வந்து இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர் விபத்து..”
அவ்வழியாக சென்ற முன்னாள் அமைச்சர் காமராஜ் முதல் உதவி செய்து மேல் சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்..
மயிலாடுதுறை மாவட்டம்.. மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் முத்தாட்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் சிவ புண்ணியம்,சுகன்யா தம்பதியினர்.
இவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சொந்த வேலையாக சென்று ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் முடிகொண்டான் அருகே சென்று கொண்டிருந்தபோது.. சாலையில் தெரு நாய் குறுக்கே வந்ததால் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது..
விபத்தில் சிக்கிய சிவப்புண்ணியம் மற்றும் சுகன்யா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் .. SIR திருத்தப் பணி குறித்து ஆய்வு மேற்கொண்டு அந்த வழியாக வந்த திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும்.. நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்.. தமிழக முன்னாள் அமைச்சருமான
ஆர். காமராஜ், விபத்தில் சிக்கி அவர்களை மீட்டு உடன் முதலுதவி செய்து.. மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உதவியாளர்களுடன்.. காரில் அனுப்பி வைத்தார்..
தொடர்ந்து.. தற்போது விபத்தில் படுகாயம் அடைந்த சிவப்புண்ணியம் மற்றும் சுகன்யா ஆகியோர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து சிவ புண்ணியம் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிவ புண்ணியம் உறவினர்கள்.. முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் காமராஜ் அவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
















