இன்றைய வேகமான வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இன்னல்கள், துன்பங்கள் எல்லாம் கர்ம பலனாகவும், கிரக தோஷங்களினாலும் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. இவற்றில் மிகவும் முக்கியமானது பித்ரு தோஷம். ஒரு குடும்பத்தில் பித்ரு தோஷம் இருந்தால், அமைதி மற்றும் செழிப்பு எளிதாக கிடைக்காது. இந்த தோஷத்திலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை பெற, சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை நாள் மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.
சித்திரை அமாவாசையின் சிறப்பு
- அமாவாசை துவக்கம்: 27.04.2025, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை
- முடிவு: 28.04.2025, திங்கள் அதிகாலை
ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அமாவாசை திதி உள்ளதால், வழிபாடுகளை இதே நாளில் செய்யலாம்.
செய்ய வேண்டிய முக்கியமான வழிபாடுகள்:
முன்னோர்களுக்கு திதி செய்யுதல்
அமாவாசை தினத்தில் திதி கொடுத்து முன்னோர்களை நினைவு கூறுங்கள். இது பித்ரு தோஷ நிவாரணத்திற்கும் குடும்பத்தின் நன்மைக்கும் உதவும்.
சூரிய பகவானை வழிபாடு
- பூஜை அறையில் சுத்தமான சோம்பில் தண்ணீர் வைக்கவும்.
- பக்கத்தில் அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றவும்.
- மனமார்ந்த பிரார்த்தனையுடன் சூரிய பகவானை போற்றுங்கள். இது தொழில் வளர்ச்சி மற்றும் வருமானம் அதிகரிக்க சிறந்ததாம்.
சந்திர பகவானை வழிபாடு
- அருகிலுள்ள நவகிரக ஆலயத்திற்கு சென்று நவகிரகங்களை வணங்கி, ஒன்பது முறை பிரதக்ஷிணம் செய்யவும்.
- சந்திர பகவானை மனதார பிரார்த்தனை செய்யவும். இது மன அமைதி, தெளிவான முடிவுகளை எடுக்க உதவும்.
அன்னதானம் செய்தல்
“தானத்திலே சிறந்தது அன்னதானம்” என்று சொல்கின்றனர். முன்னோர்களை நினைத்து ஒருவர் பயனடையும்படி உணவு வழங்குங்கள். இது உங்கள் சந்ததியின் செழிப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் பெரும் ஆசீர்வாதத்தை ஈர்க்கும்.
சித்திரை அமாவாசையில் இந்த வழிபாடுகளையும் நம்பிக்கையோடு மேற்கொள்வதன் மூலம், வாழ்கையில் வரும் தோஷங்கள் மற்றும் துன்பங்களை நீக்கி, குடும்பத்தில் அமைதி மற்றும் செழிப்பை பெற முடியும் என்று நம்பப்படுகிறது.
நம்பிக்கையுடன் வழிபடுங்கள், நல்ல பலனை பெறுங்கள்!