சிறுமிக்கு பாலியல் தொல்லை. போக்சோவில் தொழிலாளி கைது
மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி முட்டம் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சிலம்பரசன் (வயது 42). இவர் கேஸ் ஸ்டவ் பழுது நீக்கும் தொழிலாளி ஆவார். சம்பவத்தன்று 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிறுமி கூச்சல் எழுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளார். இதனையடுத்து அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற சிறுமி தனது தாயாரிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் சிலம்பரசனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிலம்பரசன் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.













