சீர்காழி நகராட்சியில் நடைபெற்றகுழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்.குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் நிகழாத வண்ணம் ஆலோசிக்கப்பட்ட கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற நிலையில் அனைத்து மகளின் காவல் நிலைய காவலர்கள் பங்கேற்காதது சர்ச்சை
சீர்காழி நகராட்சியில் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் நடந்த கூட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக, பாதுகாப்பு அலுவலர் உமாதேவி மற்றும் பலர் பங்கேற்றனர்.
இதில் நகராட்சி பகுதியில் குழந்தைகள் பிரச்சனைகள் ஏதும் உள்ளதா,அப்படி குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் இருப்பின் அவர்களின் மறுவாழ்வுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் நிகழாத வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி அறிவுறுத்தப்பட்டது. மேலும் தமிழக அரசு தற்போது செயல்படுத்தி வரும் அன்புகரங்கள் திட்டத்தில் சேர்த்திட தகுதியான குழந்தைகள் உள்ளனரா என ஆய்வு செய்யப்பட்டது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில்
கல்வித்துறை,வருவாய்த்துறை,என்.ஜி.ஓஅமைப்பினர்,சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.ஆனால் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் யாரும் பங்கேற்காதது சர்ச்சையாக இருந்தது
















