இந்தியாவிலேயே தனி சன்னதி உள்ள எமதர்மராஜா கோவிலில் தேரோட்ட விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாதர் திருக்கோவில் உள்ளது. நாம் செய்த பாவ தோஷங்களும் நம் முன்னோர்கள் செய்த பாவ தோஷங்களும் தெரிந்தும் தெரியாமலும் பாதித்தாலும் இந்த கோவிலுக்கு வந்தாலே நிவர்த்தி ஆகும். காசியை விட பன்மடங்கு மேலானவையானதும் ஆயுள் விருத்தி தலமாகவும் விளங்கி வருகிறது. இவ்வாறு சிறப்புமிக்க கோவிலில் இன்னொரு தனி சிறப்பாக உலகத்தில் எமன் பயம் இல்லாதாவர்கள் யாரும் இல்லை அந்த எம பயத்தையும் பைரவர உபாதையும் போக்கும் வகையில் இந்தியாவிலையே எம தர்ம ராஜனுக்கும் சித்ர குப்தருக்கும் தனி சன்னதி அமைந்துள்ளது. இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாத விழா வெகு விமர்ச்சையாக நடைபெறும் அந்த வகையில் இந்த வருட கார்த்திகை மாத திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் புஷ்ப பல்லாக்கு, காமதேனு வாகனம் சிம்ம வாகனம் ரிஷப வாகனம் யானை வாகனம் மயில்வாகனம் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகன எழுந்துதல் செய்யப்பட்டு வெகு விமர்ச்சையாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு 60 அடி உயரமுள்ள திருத்தேரில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா ஸ்வாமி எழுந்தருள் எழுந்தருள் செய்யப்பட்டது வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் ஆனது கீழ வீதியில் இருந்து புறப்பட்டு தெற்கு வீதி மேலவீதி வடக்கு வீதி வழியாக நில ஆடையை வந்து சேரும் மேலும் இந்த தேரோட்ட திருவிழாவை காண்பதற்காக ஸ்ரீவாஞ்சியம் கிராம மக்கள் மட்டுமல்லாது பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர் மேலும் பாதுகாப்பு பணியில் நன்னிலம் துணை காவல் கண்கணிப்பாளர் தமிழமாறன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


















