மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ , மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது :-

மயிலாடுதுறை அருகே கூரைநாடு பகுதியில் உள்ள கிட்டப்பா மேல்நிலைப் பள்ளியில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் தஞ்சாவூர் கலைப்பண்பாட்டு மையம் சார்பில் இயங்கி வரும் சவகர் சிறுவர் மன்ற மையங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த முகாமில் ஐந்து முதல் 16 வயதுடைய மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு குரலிசை , பரதநாட்டியம் , ஓவியம் , சிலம்பம் உள்ளிட்ட கலை பயிற்சிகள் வழங்கப்பட்டது. பத்து நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் நிறைவு நாளான இன்று தலைமை ஆசிரியர் அன்புச்செழியன் தலைமையில் கூட்டுறவு தணிக்கை அலுவலர் பிரபு மற்றும் இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் அன்பு மாணிக்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version