திருவாரூரில் அதிமுக முன்னாள் உணவுதுறை அமைச்சர் இரா.காமராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு பிரிவுகளாக உடைந்து எஸ்பி வேலுமணி தரப்பு தவெகவிற்கு ஆதரவாக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக செயல்பட்டதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டச் செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும் இருந்து இரா.காமராஜை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கி புதிய நிர்வாகிகளை உடனடியாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட செயலாளரும் நன்னிலம் சட்டமன்றத் உறுப்பினருமான முன்னாள் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் நீக்கப்பட்டார் இதனையடுத்து திருவாரூர் அதிமுக நகர செயலாளர் R.D. மூர்த்தி (எ) தெஷ்ணாமூர்த்தி என்கிற புதிய மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனை கொண்டாடும் விதமாக பழைய பேருந்து நிலையத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
