வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் பல்கேரியா நாட்டினர் தரிசனம்

வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் பல்கேரியா நாட்டினர் தரிசனம்.

பரபரப்பான வாழ்க்கை முறையிலிருந்து விடுபட்டு, மன அமைதிகான பல்கேரியா நாட்டைச் சேர்ந்த 13 பேர் கொண்ட குழுவினர் ஆன்மீக சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர் அவர்கள் அனைவரும் தஞ்சை பெருவுடையார் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். இன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மருவத்தூர் கிராமத்திற்கு வந்த பல்கேரியா நாட்டு ஆன்மீக சுற்றுலா பயணிகளுக்கு பறை இசை மற்றும் நாட்டுப்புற நடனத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சென்று விநாயகர், வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்பாள், செல்வ முத்துக்குமார சுவாமி மற்றும் சுப்ரமணியர் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர் பின்னர் அவர்கள் கோவில் வளாகத்தில் ஓம் நமச்சிவாயா என்ற பஞ்சாட்சர மந்திரத்தை தியானித்தனர். அவர்களுக்கு சிவாச்சாரியார்கள் விபூதி, குங்கும பிரசாதங்களை வழங்கினர்.

Exit mobile version