விஜய் பிரச்சார பயணத்திற்கு வந்த இளைஞரிடம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழிப்பறி செய்த சகோதர்கள்… சிசிடிவி கேமரா பதிவை அழித்து ஆதாரம் இல்லாமல் திருடும் சகோதரர்… அதிரடி காட்டிய திருவாரூர் போலீஸ்..
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்களம் பகுதியை சேர்ந்த அலி முனிஷா இவர் அப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடையை வழக்கம் போல கடையை திறந்து வியாபாரம் செய்து விட்டு இரவு வீட்டிற்கு வந்துள்ளனர்.. மறுநாள் கடைக்கு வந்து பார்த்த போது கடையின் சட்டர் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்த போது லேப்டாப், கல்லாவில் இருந்த 13 ஆயிரம் திருடு போய் இருந்தது தெரியவந்தது. உடனடியாக திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருடிய நபர்கள் யார் என்று விசாரணை நடத்தி வந்த நிலையில் கடையில் உள்ள சிசிடிவி கேமராவை பார்க்க முயன்ற போது சிசிடிவி கேமராவில் உள்ள ஹார்டுடிஸ்க்கும் திருடு போய் இருந்தது தெரியவந்தது… சிறிது நேரம் தொடர்ச்சியாக போலீசாருக்கு எங்களது கடைகளிலும் திருட்டு சம்பவம் நடந்துள்ளதாக அருகில் உள்ள ஆறு கடையைச் சேர்ந்த உரிமையாளர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
சூப்பர் மார்க்கெட் அதனை சுற்றியுள்ள மளிகை கடை பெட்டி கடை செப்பல் கடை என 6 கடைக்கு மேல் ஒரே இரவில் திருடியுள்ளனர்.
மேலும் போலீசார் இந்த தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்தனர் அப்போது அப்பகுதியில் காவல்துறையினர் செல்போன் டவர் டம்ப் மூலம் அப்பகுதியில் திருட்டு சம்பவ நேரத்தில் யார் யார் எல்லாம் செல்போன் உபயோகித்தார்கள் என சோதனை மேற்கொண்டதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரது மகன் ஆறுமுகம் வயது 28 அவரது சகோதரர் ஐயப்பன் வயது 24 ஆகிய இருவரும் மீது சந்தேகம் ஏற்பட்டு இருவரை போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில் இவர்கள் சூப்பர் மார்க்கெட்டில் பணம் லேப்டாப் அதேபோல் அருகில் உள்ள பெட்டிக்கடை செப்பல் கடை உள்ளிட்ட கடைகளில் திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணையில் இந்த சகோதரர்கள் ஊர் திருவிழா போன்ற இடங்களில் பிக்பாக்கெட் அடிப்பது மேலும் கடைகளில் திருடும் பொழுது கடைகள் உள்ள சிசிடிவி காட்சியில் உள்ள ஹார்ட் டிஸ்கை கழற்றி ஆற்றில் வீசி ஆதாரம் இல்லாமல் இருட்டில் ஈடுபட்டது விசாரணைகள் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக கடந்த வாரம் நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டத்திற்கு விஜய் பிரச்சார பயணத்தை மேற்கொள்ள வந்த பொழுது திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஊழியர் விஜயை பார்த்துவிட்டு அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்ல இருந்த போது அவரிடமிருந்த ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழிப்பறி செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் அவரது சகோதரர் ஐயப்பன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.