மயிலாடுதுறை காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு மிதந்து வந்த 4 நாட்கள் ஆன பெண் சிசு சடலம் மீட்பு

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு மிதந்து வந்த நான்கு நாட்கள் ஆன பெண் சிசு சடலம் மீட்பு, காவல்துறையினர் விசாரணை :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் மையப்பகுதியில் காவிரி ஆற்றின் புது பாலம் அமைந்துள்ளது. பாலத்திற்கு மேற்கு புறம் பெரிய பிளாஸ்டிக் பையில் குழந்தை ஒன்று மிதந்து வந்தது. இதனை காவல்துறையினர் துப்புரவு ஊழியர்கள் உதவியுடன் மீட்டனர். பிளாஸ்டிக் பையின் உள்ளே பிறந்த நான்கு நாட்கள் ஆன பெண் குழந்தையின் சடலம் இருப்பது தெரிய வந்தது. சிசுவின் சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version