தேனியில் இந்தியன் Red Cross Society & அரசு தலைமை மருத்துவமனை & தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் Blood camp

தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் தேனி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ரத்தம் தானம் வழங்கினர்

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் தனியார் (என்.ஆர்.டி நர்சிங் கல்லூரி) நர்சிங் கல்லூரி சார்பில் இரத்ததான முகாம் இன்று தேனியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நடைபெற்றது

இந்த ரத்ததான முகாமில் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளரும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சேர்மனுமான என்.ஆர்.டி.ஆர் தியாகராஜன் கலந்துகொண்டு இரத்த தானம் முகாமை துவக்கி வைத்தார்

இந்த முகாமில் நர்சிங் கல்லூரியைச் சேர்ந்த 50 மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர், ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், உடலில் ஏற்படும் பயன்கள் குறித்தும் இந்த முகாமில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

தொடர்ந்து ரத்த தானம் வழங்கிய மாணவ, மாணவிகளுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

இந்த நிகழ்வில் ரெட் கிராஸ் சொசைட்டியின் நிர்வாகிகள் மற்றும் தனியார் நர்சிங் கல்லூரி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Exit mobile version