May 7, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

by Satheesa
November 28, 2025
in News
A A
0
திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம்: அரசு அதிகாரிகள் போலி உர விற்பனையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பின்பு வெளிநடப்பு செய்து மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் அமர்ந்து முற்றுகை போராட்டம்…

   திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கான போலி உரங்கள் புலக்கத்தில் இருந்துவருவுதாகவும், இதுகுறித்து ஆதாரங்களுடன் அரசு அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் போலி உரங்கள் விற்பனை செய்யும் கடையினருக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் ஆதரவாக இருப்பதாக குற்றம்சாட்டி இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் போலி உரங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பின்னர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள திருவாரூர் மாவட்டத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.  குறிப்பாக தற்போது நடவு செய்யப்பட்டுள்ள இளம்பயிர்களின் வளர்ச்சிக்கு அடி உரமாக டிஏபி உரமிடுவது அவசியம்.  அந்த வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு போதுமான அளவு உரம் வழங்கப்படாத நிலையில் விவசாயிகள் தத்தம் பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளை நாடி உரங்களை வாங்கி வருகின்றனர்.

   இதன்படி கடந்த வாரம் கோட்டூர் அருகே உள்ள கோமலபேட்டை எனும் கிராமத்தில் விவசாயி ஒருவர் ஒரு மூட்டை டிஏபி உரத்தை ரூ.1400க்கு வாங்கி சென்றுள்ளார்.  பிரபல உர நிறுவனங்களின் பெயரில் அச்சு அசலாக உருவாக்கப்பட்ட டிஏபி உர மூட்டையினை அவிழ்த்து பயிருக்கு உரம் தெளிக்க முற்பட்டபோது போலியான உரம் என்பது விவசாயிக்கு தெரியவந்துள்ளது.  மேலும் அந்த உரத்தை தண்ணீரில் கரைத்துபார்ர்தபோது களிமண் என கண்டறிந்த விவசாயி போலி உரம் குறித்து அருகில் இருந்து விவசாயிகளிடமும், மாவட்ட வேளாண்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

   இந்நிலையில் கோமலபேட்டை கிராமத்தில் உள்ள தனியார் உரக்கடையினை பெயரளவிற்கு ஆய்வு செய்த வேளாண் அதிகாரிகள், போலி உர விற்பனை கடை உரிமையாளர் மீது வேளாண் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் உறுதியாக மேற்கொள்ளாததால் மீண்டும் அக்கடை உரிமையாளர் போலி உரங்களை தங்கு தடையின்றி விற்பனை செய்ய தொடங்கினார்.  இதேபோன்று மேலபனையூர், கீழமருதூர், நல்லூர், அஷேசம், வாட்டார், தலையாயமங்கலம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 37க்கும் மேற்பட்ட தனியார் உரக்கடைகளிலும் இத்தகைய போலி உரங்கள் விற்பனை செய்துவருவதாக விவசாயிகளிடம் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

   மேலும் மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் போலி உரங்கள் புலக்கத்தில் உள்ளதாகவும் குற்றம்சாட்டும் விவசாயிகள் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து போலி உரங்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களை கைது செய்தும், இதற்கு உடந்தையாக இருந்துவரும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் போலி உரங்களுடன் வந்த விவசாயிகள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் முன்பு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

   மேலும் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் போலி உர விற்பனை சம்மந்தமாக உரிய விளக்கம் அளிக்காத நிலையில் விவசாயிகள் கூட்ட அரங்கில் இருந்து போலி உர விற்பனையை கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு வெளிநடப்பு செய்து மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் முன்பு போலி உர மூட்டைகளுடன் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் திருவாரூர் மாவட்டத்தில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி உரங்கள் விற்பனை செய்வதை தமிழக முதல்வர் தலையிட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும், போலி உரம் விற்பனை செய்யும் கடை உரிமையாளரை கைது செய்யவேண்டும், இதனை அனுமதித்த வேளாண் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என போராட்டத்தின் போது விவசாயிகள் வலியுறுத்தினர்.  இதனை தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் விவசாயிகள் போராட்டதை கைவிட்டு கலைந்துசென்றனர்.

பேட்டி: கண்ணன், விவசாயி, கோட்டூர் மேலபனையூர் கிராமம்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

Next Post

சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

Related Posts

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
News

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.