சென்னை அசோக்நகரில் 500 வருடங்களுக்கு மேலாக அருள்மிகு மல்லிகேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்திருத்தலத்தில் கிபி 1780 -1830 வாழ்ந்த தோபாசாமி சித்தர் தங்கி இறைவனை தினமும் பூஜித்ததாக வரலாற்று சுவடுகள் குறிப்பிடுகின்றன.
இக்கோயிலில் சுயம்பு லிங்கமாக சிறிய வடிவில் காட்சியளிக்கிறார் மல்லிகேஸ்வரர். மல்லிகை வனத்தில் இருந்தவர் என்பதால் இவரை மல்லிகேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
இக்கோயில் 3 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி உள்ளது. கருவறை சன்னதி, அர்த்த மண்டபம் மற்றும் முக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முக மண்டபத்தில் நந்தியும் பலிபீடமும் உள்ளன.

கோஷ்டத்தில் வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு, பிரம்மா, சரஸ்வதி, மகாலட்சுமி மற்றும் துர்க்கை. கருவறை செவ்வக வடிவில் உள்ளது. மையத்தில் ஸ்ரீ மல்லிகேஸ்வரர், வலதுபுறம் ஸ்ரீ சக்தி கணபதி மற்றும் வலதுபுறம் ஸ்ரீ விசாலாக்ஷி சமேத ஸ்ரீ விஸ்வநாதர். ஸ்ரீ மகேஸ்வரி தெற்கு நோக்கியவள்.
சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், நடராஜர், சனீஸ்வரர், பைரவர், பக்த ஜெய ஆஞ்சநேயர் ஆகியோருக்கான பராகாரம் சன்னதியில் ராமர், சத்திய நாராயணர், சந்திரன் மற்றும் சூரியன்.
இந்த மல்லிகேஸ்வரை மல்லிகை பூ சாத்தி வழிப்பட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இக்கோயிலில் சிவராத்திரி மற்றும் நவராத்;திரி தினத்தன்று விஷேச பூஜைகள் அலங்காரத்துடன் சிவனை பக்த கோடிகள் தரிசிக்கலாம்.
அஷ்டமி தினத்தன்று பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பேளர்ணமி தினத்தன்று சத்திய நாராயணனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்தகோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது என்று சித்தர் எழுதிய குறிப்பில் உள்ளது .