சில நாட்களுக்கு முன் கோவையில் நடைபெற்ற பாலியல் பலாத்காரம் குறித்து.. மமுதலமைச்சரின் நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
திருவாரூர் மாவட்ட பாஜக மகளிர் அணி தலைவி மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்.. தமிழக அரசை எதிர்த்து முழக்கமிட்டனர்.. தொடர்ந்து பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினரும் ஊடகப் பிரிவின் பொறுப்பாளருமான.. டாக்டர். திவ்யா சேஷாத்ரி.. பேட்டி அளித்தார்.
“கோவையில் மிகப்பெரிய கொடூரம் அரங்கேறி உள்ளது.. எங்களுடைய சகோதரி ஒருத்தருக்கு நடந்திருக்கும் இந்த மோசமான நிலைமையை கண்டிச்சு அரசாங்கத்திடம் நம்மளுடைய திமுக தலைவர் கிட்ட சிஎம் கிட்ட நீதி கேட்டு இந்த போராட்டத்தை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம்..
இத மாதிரி விஷயங்கள் இது முதல் முறை கிடையாதுங்க.. எப்ப பாத்தாலும் இதே மாதிரி சீண்டல்களும் அதுக்கப்புறம் பாலியல் வன்கொடுமைகளும் பெண்கள் மேல நிகழ்த்தப்பட்டு தான் இருக்கு.. கண்டிப்பா இதுக்கு எதிரா எங்களுக்கு பாதுகாப்பா எங்களுக்கு அரசாங்கம் கண்டிப்பா ஒரு அரணை ஏற்படுத்தி கொடுக்கணும்..
இனிமேலாவது பெண்கள் தனியா வெளியே போனா பயப்படாம இருக்கணும் சமையலறையில் இருந்து வெளியே வந்த பாரதி சொன்ன புதுமைப்பெண்கள் மீண்டும் சமையலறைக்குள்ளே முடங்கும் நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கு..
இதுக்கு முதன்மையான காரணம் என்னன்னு பார்த்தீங்கன்னா மதுபானம் கண்டிப்பாக அந்த சாராயம் விற்பனையினால் தான் இன்னைக்கு எங்களுடைய சகோதரிக்கு அந்த நிலைமை ஏற்பட்டு இருக்குங்க… கோயம்புத்தூர் நகரத்தில் இந்த கொடுமை அரங்கேரி இருக்கு அந்த பெண் சட்ட கல்லூரி மாணவி ஒரு அந்தப் பெண் சட்ட கல்லூரி மாணவி ஒரு விமான நிலையத்துக்கு பின்புறமாக காரணம் தன்னுடைய நண்பர்கிட்ட பேசிட்டு இருந்த பெண்ணை ஒரு 10.40 pm அளவுக்கு மூன்று நபர்கள் வந்து அடையாளம் தெரியாதவர்கள் கண்ணாடியை உடைச்சு அந்த பெண்ணுடைய நண்பரை வெளியே இழுத்து அறிவாலால் வெட்டி அந்த பெண்ணை 1 கிலோமீட்டர் இழுத்து எடுத்துட்டு போயி மிருகத்தை விட கேவலமா ஐந்து மணி நேரம் பாலியல் வன்கொடுமைக்கு ஈடுபடுத்தி இருக்காங்க.. அந்த பெண், அந்த பெண்ணுடைய நண்பரும் இப்ப ஹாஸ்பிடல்ல இருக்காங்க.. அரசாங்கம் சொல்லுது அங்க வந்து கால்ல சுட்டு புடிச்சிருக்கோம்.. அந்த கொடூரத்தில் ஈடுபட்ட தீயவர்களை பிடித்து இருக்கோம்னு சொல்லிட்டு இருக்காங்க.. ஆனால் எங்களுக்கு நீதி வேண்டும் என கூறினார்.. என பேட்டி அளித்தார்.

















