விவேகானந்தரின் 163 வது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர் :-
இந்தியாவின் வீரத்துறவி எனப்படும் சுவாமி விவேகானந்தரின் 163 வது பிறந்த தின விழா இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் அவரது திருவுருவ படத்திற்கு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கச்சேரி சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி மோடி கண்ணன் அலுவலகத்தில் சுவாமி விவேகானந்தர் திருவுருவப்படத்திற்கு மலர அலங்காரம் செய்யப்பட்டது.25வது வார்டு கிளைச் செயலாளர் ஆர் சுந்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாஜக முன்னாள் மாவட்ட துணைத் தலைவரும், தூய்மை இந்தியா திட்டத்தின் மயிலாடுதுறை ஒருங்கிணைப்பாளரும் மோடி கண்ணன், பாஜக நகரத் தலைவர் ராஜகோபால், நகர துணைத் தலைவர் செல்வம், புளூட்டோர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அக்கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மலர் தூவி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இதனை எடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

















