மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் பைசன் திரைப்படம், கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட வாழ்க்கை வரலாற்று படம் ஆகும். இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் “தீக்கொளுத்தி” சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, வேடன் மற்றும் அறிவு பாடிய இரண்டாவது பாடல் “றெக்க றெக்க” வெளியானது; இது கூட பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், பைசன் படத்தின் மூன்றாவது பாடலான “சீனிக்கல்லு” நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முதல் இரண்டு பாடல்கள் வெற்றிகரமாகப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில், புதிய பாடல் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.