காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் அமைந்துள்ள நாயக்கன்பேட்டை என்ற புனித கிராமத்தில் அருள்மிகு அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் பக்தர்களின் ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்யும் தலமாக உயர்வடைந்துள்ளது.
இத்தலத்தில் திருமணம் மட்டுமல்லாது, ஷஷ்டியப்த பூர்த்தி (60வது ஆண்டு), பீமரத சாந்தி (70வது ஆண்டு), சதாபிஷேகம் (80வது ஆண்டு), ஆயுஷ் ஹோமம் முதலான விசேஷ ஆன்மீக நிகழ்வுகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன.
திருக்கடையூருக்குப் பிறகு, ஷஷ்டியப்த பூர்த்திக்கு புகழ்பெற்ற இடமாக இத்தலம் அறியப்படுகிறது. வேகவதி ஆற்றின் வட கரையில் அமைந்திருப்பதால், இதனை “வட திருக்கடையூர்” எனவும் பக்தர்கள் அழைக்கின்றனர்.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் குடிநீருக்காக மக்கள் தோண்டிய குளத்தில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக நீரிலிருந்து வெளிப்பட்டு அருள்பாலித்ததால், “அமிர்தகடேஸ்வரர்” என்ற திருநாமம் பெற்றுள்ளார். இவருடன் அபிராமி அம்பாள் சதுர்புஜ நாயகியாக நின்றதிருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
கோவிலின் அமைப்பு:
- இடப்புறம் ஸ்ரீ விநாயகர் சந்நதி
- வலப்புறம் வள்ளி-தேவசேனா சமேத முருகப் பெருமான்
- கருவறை நோக்கி நந்தியெம்பெருமான்
- அர்த்தமண்டபத்தில் விநாயகர்
- கோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை
- வெளிப்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், பைரவர், நவகிரகங்கள், சனீஸ்வரர், சூரியன்
முக்கிய பண்டிகைகள் மற்றும் உற்சவங்கள்:
- சித்திரை வருடப் பிறப்பு
- வைகாசி விசாகம்
- ஆடிப்பூரம்
- விநாயக சதுர்த்தி
- ஐப்பசி அன்னாபிஷேகம்
- கார்த்திகை சோமவாரம்
- மார்கழி திருவாதிரை
- தைப்பூசம்
- ரத சப்தமி
- மகா சிவராத்திரி
- மாதப் பிரதோஷம்
- தை மாத கடைசி வெள்ளிக்கிழமை விளக்குப் பூஜை
ஸ்தல விருட்சம்: வன்னி மற்றும் வில்வம்
கோவில் நேரம்:
காலை 6:00 – மதியம் 1:00
மாலை 4:30 – இரவு 8:00
இருப்பிடம்:
செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலையில் வாலாஜாபாத் அருகே, ஏகனாம்பேட்டை சந்தியில் இடதுபுறம் சுமார் 1 கிமீ பயணித்து நாயக்கன்பேட்டை கோவிலை அடையலாம்.