திருவள்ளூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டிப் போட்டிகளை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலையில் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக மிதிவண்டிப் போட்டிகளை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த மிதி வண்டி போட்டியில் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15.கிலோ மீட்டர் வரையிலான தூரமும், மாணவியர்களுக்கு 10.கிலோ மீட்டர் வரையிலான தூரமும் மற்றும் 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20.கிலோ மீட்டர் வரையிலும், மாணவியர்களுக்கு 15. கிலோ மீட்டர் வரையிலும், மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20.கிலோ மீட்டர் வரையிலும், மாணவியர்களுக்கு 15. கிலோமீட்டர் வரையிலும் என மிதிவண்டி போட்டிகள் நடத்தப்பட்டது. சாதாரன மிதிவண்டிகளை மட்டுமே அனுமதிக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களையும் அமைச்சர் நாசர் நேரில் வழங்கினார்.















