திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பாச்சல் ஊராட்சியில் ஆசிரியர் நகர் பகுதியில் குப்பை கழிவு கொட்டுவதால் துார்நாற்றம் சாலையோரம் குப்பைகள் கொட்டி வருகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் மக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது. இது குறித்து பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தில் புகார் செய்தும், அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். குப்பை கொட்டுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
















