சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி, ஒயிலாட்டம் மயிலாட்டம் தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது :-
ஆண்டுதோறும் ஜனவரி ஒன்றாம் தேதி துவங்கிய 31ம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. பாதுகாப்பான சாலை பயணங்கள் விபத்து இல்லாத பயணங்கள் இவற்றை வலியுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம், இந்த ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு மினி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை டி எல் சி சர்ச் வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வரை நடைபெற்றது. முன்னதாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் ஒயிலாட்டம் மயிலாட்டம் தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
















